tamilnadu

img

கொரோனா கிட் தொழில்நுட்பமும் குஜராத் நிறுவனத்திற்கே!

புதுதில்லி:
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐசிஎம்ஆர்), கொரோனா ஆண்டிபாடியைக் கண்டறியும் வகையில் ‘எலிசா’ டெஸ்ட் கருவியை உருவாக்கியுள்ளது. 

ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் புனே-வில் உள்ள அரசு ஆய்வகமான ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி’யின் விஞ்ஞானிகள்தான், “கோவிட் கவாச்” எனப்படும் இந்த எலிசா பரிசோதனைக் கருவியை உருவாக்கிய பெருமைக்கு உரியவர்கள்.இந்த கருவியானது, ரத்த மாதிரிகளில்நாவல் கொரோனா வைரஸ் ஆண்டிபாடிகள் இருப்பதை கண்டறியும்.இந்நிலையில், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி’ கண்டுபிடித்த எலிசாபரிசோதனைக் கருவியைத் தயாரிக்கும் காண்ட்ராக்டை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாக கொண்ட ‘ஜைடஸ்காடிலா’ என்ற பிரபல மருந்து நிறுவனத்திற்கு மோடி அரசு வழங்கியுள்ளது. “கோவிட் கவாச்” தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளது.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எலிசா டெஸ்ட் கருவிகள் தயாரிக்கும்பல நிறுவனங்கள் நாட்டில் இருக்கும்போது,குஜராத்தின் ‘ஜைடஸ் காடிலா’ நிறுவனத்திற்கு மட்டும் காண்ட்ராக்ட்டை கொடுத்தது ஏன்? என்று மருந்து நிறுவனங்கள் கேள்விகள் எழுப்பியுள்ளன.“தொழில்நுட்ப பரிமாற்ற உரிமத்திற்கான ஏலம் பற்றிய விவரங்கள் முன்கூட்டியே எங்களுக்குத் தெரியாது; செய்தித்தாள் வழியாகவே, ‘ஜைடஸ் காடிலா’ நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டதை தெரிந்து கொண்டோம்” என்று இத்துறையில் பிரபலமான 3 நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இவ்வாறுகுஜராத் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டதற்கு பின்ணி என்ன? எனவும் கேட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு, இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் அரசு முடிவெடுத்ததாக, மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் பதிலளித்துள்ளார்.வேகமாக உற்பத்தி செய்யும் திறன் மற்றும் முதலில் உற்பத்தி செய்ய வேண்டியஇடம் ஆகியவையே அந்த அம்சங்கள் என்றும், தேவைப்பட்டால், பிற நிறுவனங்கள் இதில் சேர்க்கப்படும் எனவும் சமாளித்துள்ளார்.

;