tamilnadu

img

‘நிதி’ கொடுத்தவர்களுக்கே புல்லட் ரயில் திட்ட டெண்டர்....

புதுதில்லி:
பாஜகவுக்கு நிதி கொடுத்தவர்களுக்கே, மகாராஷ்டிர மாநிலத்தின் புல்லட் ரயில் திட்டப் பணிகளுக்கான டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.சிவசேனா தலைவர் உத் தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற உடனேயே, பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று அறிவித்தார். இவ்விஷயத்தில், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள் ளார். இதனால், புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுக்கு அதிகளவு நிதி கொடுத்தநிறுவனங்களுக்கே புல்லட் ரயில்திட்டப் பணிகள் தொடர்புடைய காண்ட்ராக்டுகள் வழங்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.வதோதரா ரயில் நிலையத்தில், கணினி முன்பதிவு மையத்திற்கான ஒப்பந்தம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் 3 தவணைகளாக சுமார் 55 லட்சம் ரூபாயை பாஜக-வுக்கு நிதியாக கொடுத்துள்ளது. இதற்கு கைமாறாக 3 காண்ட்ராக்ட்டுகள் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அந்த நிறுவனத்தின் திட்டங்களையும் பிரதமர் மோடியும், அமித்ஷாவுமே ஆரம்பித்துவைத்துள்ளனர்.இதேபோல சவானி, தான்ஜிஎன்ற நிறுவனங்கள் அகமதாபாத் அதிவேக ரயில்வே புராஜெக்டை பெற்றிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும் முறையே பாஜக-வுக்கு ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 2.5 லட்சத்தை பாஜக-வுக்கு நிதியாக வழங்கியுள்ளனர்.