தில்லி
இந்தியாவில் 1,007 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் மற்றும் இதுவரை 31,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,696 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமான மராட்டியத்தில் 9,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 400 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 55 வயதான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதனால் 1,000 சிஆர்பிஎப் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா கொரோனாவால் பாதிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்தனர். கொரோனா தாக்குதலுக்கு எதிராகப் போராட இந்தியா தயாராக வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். இந்தியாவில் குடிசைகளின் வழியாக வைரஸ் காட்டுத்தீ போல் பரவக்கூடும். ஏனெனில் அங்கு நெரிசலான இடங்களில் மக்கள் வசிக்கின்றனர். சுகாதார வசதி அவர்களுக்கு பெரும்பாலும் கிடைக்க வாய்ப்பில்லை என பார்வையாளர்கள் கவலைப்பட்டனர்.
உலகில் இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியா மோசமான நிலையிலிருந்து தம்மை தற்காத்துக்கொண்டதாகத்தான் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் 31,360 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சம் மக்களுக்கு 0.76 என்ற விகிதத்தில் இறப்பு என்ற விகிதம் உள்ளது. அமெரிக்காவில் 10 லட்சம் மக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 175 க்கும் அதிகமாக உள்ளது.
இரண்டாம் கட்ட ஊரடங்களில் எதிர்பார்த்த பாதிப்புகள் இல்லை என்று பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் லாப நோக்கற்ற நிறுவனத்தின் பொது சுகாதார அறக்கட்டளை தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி. கூறியுள்ளார். இருப்பினும் இது குறித்த புத்தகத்தை நாங்கள் முழுமையாக மூடிவிட்டோம் என்று சொல்ல முடியாது என்றார். இந்தியாவில் 130 கோடி பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு. சீனாவும் ஊரடங்கு அறிவித்தது. ஆனால் நாடு முழுவதும் அல்ல. நகரங்கள், சில மாகாணங்களில் மட்டுமே. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது மிக உயர்ந்த முடிவாகும். ஊரடங்கு என்பது மிகவும் கடினமானது லட்சக்கணக்கான தினக் கூலி தொழிலாளர்கள் வருமானத்தை இழந்து உள்ளனர். ஜூன் மாதத்தில் இந்தியாவில் சுமார் 150 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மே 3-ஆம் தேதிக்குப் பின்னர் சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடும். ஆனால் சமூக இடைவெளியை அவர்கள் கடைப்பிடிப்பது அவசியம்.மே 3 ம் தேதி ஊரடங்கை நீக்கும்போது என்ன நடக்கும் என்பது பற்றி ஒரு பெரிய பன்முக கருத்து உள்ளது. பாதிப்புகள் பின்னர் உயரும். அப்போதுதுன் ஊரடங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறோமா என்பது தெரியவரும். ஊரடங்கை விலக்கினால் கொரோனா பாதிப்பில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். ஆனால் ஊரடங்கை கைவிடமுடியாது என அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகி ஊமன் குரியன். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.