புதுதில்லி:
காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் உண்மையில்லை என திடீரென அவர் பின்வாங்கியுள்ளார். பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது என்றும் ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.