tamilnadu

img

தோழர் பாஜுபான் ரியான் மறைவு

சிபிஎம்  ஆழ்ந்த இரங்கல்

புதுதில்லி, பிப். 22- திரிபுரா மாநில முது பெரும் தலைவர் தோழர் பாஜுபான் ரியான் மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில முதுபெரும் தலைவரும், முன்னாள் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் பாஜுபான் ரியான், உடல் நலிவுற்று அகர்தலா, ஐஎல்எஸ் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந் தார். சிகிச்சை பலனளிக்கா மல் அவர் 2020 பிப்ரவரி 21 அன்று மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு, கட்சி யின் அரசியல் தலைமைக் குழு தன் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக்கொள்கி றது. அவருக்கு வயது 79.

தோழர் பாஜுபான் ரியான், 2008இல் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில், கட்சியின் மத்தி யக்குழுவிற்குத் தேர்ந்தெ டுக்கப்பட்டார். பின்னர் 2018இல் நடைபெற்ற 22ஆவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு பொறுப்பிலி ருந்து விடுவிக்கப்பட்டார். அவர், 1973இல் கட்சியின் திரி புரா மாநிலக் குழுவிற்கும், 2002இல் மாநில செயற்குழு விற்கும் தேர்ந்தெடுக்கப்பட் டிருந்தார். கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக இருந்தார். தோழர் பாஜுபான் ரியான், திரிபுரா கிழக்கு நாடா ளுமன்றத் தொகுதியிலி ருந்து தொடர்ந்து ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நிக ரற்றவராவார். பழங்குடியின மக்களுக்கு வன நிலங்களில் உரிமைகளைப் பெற்றுத்தரு வதற்கான ஐமுகூ-1 அர சாங்கக் காலத்தில் வன உரி மைகள் சட்டத்தை வடிவ மைத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்த வர்களில் ஒருவராவார். இரு முறை திரிபுரா மாநில சட்ட மன்ற உறுப்பினராகவும், திரி புரா இடது முன்னணி அர சாங்கத்தில் வேளாண் அமை ச்சராகவும் இருந்திருக்கி றார்.

ஆதிவாசி அதிகார் ராஷ்டிரிய சமிதியின் நிறு வனத் தலைவருமாவார். மேலும் அகில இந்திய விவ சாயிகள் சங்கம் மற்றும் கண முக்தி பரிஷத் ஆகியவற்றின் உன்னதமான தலைவர்களில் ஒருவருமாவார். அவரது மரணம், கட்சிக் கும் திரிபுரா கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பாகும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு தன் ஆழ்ந்த இரங் கல்களை அவருடைய குடும் பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது.      (ந.நி.)