tamilnadu

img

குடியுரிமை சட்டம்: உள்துறை அதிகாரி புது விளக்கம்

புதுதில்லி:
குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மறுப்புதெரிவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகளின் கடும்எதிர்ப்பையும் மீறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் மக்களும் மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த சட்டத் திருத்தத்திற்கு பாஜக ஆளாத மாநிலஅரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியல்சாசனத்திற்கு எதிராகவுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர்  தெரிவித்துள்ளனர். மேலும் இதனை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப்போவ தில்லை என்று தெரிவித்தனர்.  பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச மாநில முதல்வர்களும் இதனை தங்கள் மாநிலங்களில் அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகத்தின் அதிகாரிஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் மத்தியப் பட்டியலின் கீழ்இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மீது சட்டமியற்ற மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மத்தியஅரசுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் தொடா்பாக இயற்றப்படும்சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

;