tamilnadu

img

அமெரிக்காவை முந்தியது சீனா!

புதுதில்லி:
தனியாருக்குச் சொந்தமான 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ‘யுனிகார்ன்’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமெரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
இந்நிலையில் 2019 ஜூன் மாத நிலவரப் படி, அதிக ‘யுனிகார்ன்’ ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் முறையாக அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் மொத்தம் 494 ‘யுனிகார்ன்’ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போதுஇருக்கின்றன. அதில் சீனாவில் மட்டும் 206 நிறுவனங்கள் உள்ளன. அமெரிக்காவின் எண்ணிக்கை 203 மட்டுமே ஆகும்.‘ஹூரன்’ நிறுவனம் இந்த ஆய்வு முடிவைவெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ளயுனிகார்ன் நிறுவனங்களில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமே 80 சதவிகித ஆதிக்கத்தைக்கொண்டிருப்பதாக ஹூரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில் விசுவல் கேப்பிட்டல்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த பட்டியலில், வெறும் 94 யுனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே சீனாவில் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அப்போது அமெரிக்காவில் இருந்த யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 156 மட்டுமே. தற்போது அதில் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது.

;