tamilnadu

img

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையும் போர்க்களமானது

சென்னை,டிச.16- திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் அசாம் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. தில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தாக்கப்பட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தில்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

தில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நடந்த இந்த போராட்டத்தில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். சென்னையில் அசாம் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் திடீரென கூடிய 300 பேர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். பிறகு, அங்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நுங்கம்பாக்கத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அசாம் வாலிபர்கள் பின்னர் கலைந்து சென்றனர். இருப்பினும் அசாம் வாலிபர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கடற்கரை பகுதி முழுவதும் ரோந்து சுற்றி வெளிமாநில மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பணி செய்து வரும் அசாம் மாணவர்களையும் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி பல்கலை. மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி, டிச. 16- மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தில்லி காவல் துறையை  கண்டித்து புதுச்சேரி மத்திய  பல்கலைக்கழக மாணவர்கள்  வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி ஜாமியா மிலியா மற்றும் அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்  கழகத்தில் அத்து மீறி உள்ளே புகுந்து மாணவர்கள் மீது தாக்கு தல் நடத்திய தில்லி காவல்துறையை கண்டித்து, புதுச்சேரி காலாப்  பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் திங்களன்று  (டிச. 16) வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  முன்னதாக பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாண வர்கள் ஒன்றுகூடி மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட னர். மேலும் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்  மீது நடவ டிக்கை எடுக்கக் கோரியும், குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப்  பெற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.  பின்னர் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று புதுச்சேரி-  சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்  துறையினர் மாணவர் சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு  பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றனர். மாணவர்களின் போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகம் போர்போல் காட்சி அளித்தது.

;