tamilnadu

img

சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் நாட்டுக்கு நல்லதல்ல.. சர்வதேச சமூகத்திலிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படும்

புதுதில்லி:
மோடி அரசின் குடியுரிமைச் சட்ட நடவடிக்கையால், சர்வதேச சமூகத்திடமிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாக, முன்னாள் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்கூறியுள்ளார்.தில்லியில் வெள்ளியன்று கல்வியாளர்கள் பங்குபெற்ற கருத்தரங்கத்தில் ஒன்றில் சிவசங்கர் மேனன் பேசியுள்ளார்.அப்போதுதான் இவ்வாறு அவர் எச்சரிக்கை செய்துள்ளார். அந்த கருத்தரங்கில்மேலும் அவர் பேசியிருப்பதாவது:“தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும்குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய இரண்டின் மீதும் எனது கவலை அதிகரித்துள் ளது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை உட்பட,தொடர்ச்சியாக தற்போது கொண்டு வரப்பட்ட சிஏஏ, என்ஆர்சி நடவடிக்கைகளின் குவிமைய விளைவு என்னாகும் என்றால், அது - ‘நாம் தனிமைப்படுத்தப்படுவோம்’ என்பதேயாகும்.

“குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனக் குரல்கள் அதிகமாகியிருக்கின்றன. சிஏஏ சட்டத்திற்குப் பின் இந்தியாவின் மீதான பார்வை மாறியிருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம்இந்தியா தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் கருத்து மாறிவிட்டதா, என்று நமதுநண்பர்கள் கூட அதிர்ச்சியுடன் இருக் கின்றனர். சகிப்புத் தன்மையற்ற நாடு என்ற பெயர் பெற்றிருக்கும் பாகிஸ்தானுக்கு 
இணையாக இந்தியாவின் பெயரும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளே இப்போது தென்படுகின்றன.இப்போது உலகமே நமக்கு முக்கியமானது. நாம் நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்வது நல்லதல்ல.வங்கதேசம் உருவாவதற்கு நாம் உதவியபோது, உலகளாவிய கருத்து நம்பக்கம் இருந்தது. இப்போது என்ன நடக்கிறது? நாம் பெரிதும் தனிமைப்படுத்தப்படுகிறோம். இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தோரின் ஒரு பகுதியையும் சில தீவிர வலதுசாரி ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களையும் தவிர நமக்கு தவிர சர்வதேச ஆதரவு இல்லை.‘அவர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்ளட்டும்’ என வங்கதேசவெளியுறவு அமைச்சர் கூறுகிறார். அதாவது, நட்பு பாராட்டும் நண்பர்களே இதுபோல விரக்தி கருத்தை தெரிவித்தால் எதிரிகள் என்ன மாதிரியாக இருப்பார் கள்?நாம் சர்வதேச உடன்படிக்கைகளை மீறுவதாகத் தெரிகிறது. சர்வதேச சட்டங் களை, ஒப்பந்தங்களை அமல்படுத்த முடியாது என்று நினைப்பவர்கள், சர்வதேசமரபுகளை மீறுபவர்களாக கருதப்படுவதன் அரசியல் ரீதியான மற்றும் பிறவகையிலான பாதிப்புகளையும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்” இவ்வாறு சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.

;