tamilnadu

img

எல்லை வரையறை ஒரு பிரச்சனை அல்ல; அதை பேசிக் கொள்ளலாம் : மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை...

புதுதில்லி:
அமெரிக்கா நீண்ட காலமாக சீனாவுடன் மோதல் போக்கைக் கையாண்டு வருகிறது. குறிப்பாக, தனது வர்த்தக மற்றும் அரசியல் மேலாதிக்கத்திற்கு சீனாபோட்டியாக உருவெடுத்திருப்பதை அமெரிக்காவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 
இதனிடையே கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்தேஉலகம் முழுவதும் பரவியதாக குற்றம்சாட்டியிருக்கும் அமெரிக்கா, இதுதொடர் பாக சீனா விசாரிக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் இந்த நிலைபாட்டிற்கு இந்தியாவும் அண்மையில் தனது ஆதரவை தெரிவித்தது. 

இது சீனாவுக்கு அதிருப்தியை ஏற் படுத்திய பின்னணியில், தற்போது இந்திய- சீனா எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய - சீன நாடுகளுக்கு இடையே எல்லை வரையறை பெரிய விஷயம் இல்லை என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான இந்திய அரசின் நிலைபாடுகள்தான் முக்கியமானவை என்றும் சீனாவின் முன்னணி பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்‘ (Global Times)கூறியுள்ளது.இதுதொடர்பாக அந்த பத்திரிகையில், சில நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டுள்ள கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேபல்வேறு பிரச்சனைகளில் மோதல் போக்கு இருந்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து இருக்கிறது. உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கும் இடையே புதிதாகபனிப்போர் ஏற்பட்டுள்ளதாக சிலர் கணித்து உள்ளனர்.இந்த சூழ்நிலையில், அமெரிக்கா - சீனாமோதல் விவகாரத்தில் தலையிடாமல் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் அமெரிக்கா - சீனா இடையேயான மோதலில் இந்தியா தலையிடுவதால் அந்த நாட்டுக்கு கிடைக்கும் ஆதாயத்தை விட இழப்பே அதிகம். இதை புரிந்துகொண்டு மோடி அரசாங்கம் செயல்படவேண்டும்.அமெரிக்கா - சீனா இடையேயான பனிப்போரில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்றும், இதன்மூலம் ஆதாயம் பெறலாம் என்றும் இந்தியாவில் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். அதற்காக அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத குரல்கள்இந்திய அரசை தவறாக வழிநடத்துமே தவிர ஒட்டுமொத்த தேசத்தின் எண்ணத் துக்கு உகந்ததாக இருக்காது.

சீனாவுடனான எந்த பிரச்சனையை கையாளுவதாக இருந்தாலும், அதில் அமெரிக்காவின் தாக்கம் இல்லாமல் இந்தியா பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு சமீபத்திய உதாரணமாக எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கூறலாம். இந்த பதற்றத்தை இரு நாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். அதற்கான திறமை இரு நாடுகளுக்கும் உண்டு. மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லை.இவ்வாறு ‘குளோபல் டைம்ஸ்’ எழுதியுள்ளது.

;