tamilnadu

img

மது பாட்டிலில் காந்திபடம் ஒட்டியதற்கு மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் நிறுவனம் 

இந்தியாவில் தேசத்தந்தை காந்தியடிகளின் படத்தை மதுபாட்டிலில் ஒட்டியதற்கு இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

இஸ்ரேலின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கடந்த மே மாதம் அந்நாட்டின் பிரபல பீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று புது வகையான பீர் பாட்டில்களை தயாரித்தது. அந்த புதுவகை மதுபாட்டில்களில்  சில புகழ்ப்பெற்ற முக்கிய தலைவர்களின் படங்களை இடம்பெற்றுள்ளன. இந்த பாட்டில்களில் ஒட்டப்பட்ட புகைப்படங்களில், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்களான டேவிட் பென் குரியன், கோல்டா மேர், மெனாசம் பெகின் மற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படமும் இருந்தது.  ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களில் காந்தியின் புகைப்படம் இஸ்ரேல் நாட்டைச் சேராத ஒருவரது புகைப்படம் ஆகும். இந்த சம்பவம்  மாநிலங்களவையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இதனையடுத்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்நிறுவனம் தற்போது  மன்னிப்பு கோரியுள்ளது. 
இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் கிளாட் ரோர் கூறுகையில், 'எங்கள் நிறுவனத்தின் செயல், மனதை புண்படுத்தும் வகையில் இருந்திருந்தால் அதற்காக இந்திய மக்களிடமும், இந்திய அரசிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். 
நாங்கள் மகாத்மா காந்தியின் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறோம். எவ்வித தவறான நோக்கத்தோடும் இவ்வாறு செய்யவில்லை. பாட்டில்களில் இருந்து மகாத்மா காந்தியின் புகைப்படத்தை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
 

;