tamilnadu

img

சிதையிலிருந்து பாதியிலேயே அகற்றப்பட்ட தலித் இளம்பெண் பிணம்... பாஜக ஆளும் உ.பி.யில் அரங்கேறிய சாதியக் கொடூரம்

லக்னோ:
தலித் பெண்ணின் உடலை எரிக்க விடமாட்டோம் என்று, அராஜகத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்கள், சிதையில் வைக்கப்பட்ட உடலை பாதியிலேயே அகற்ற வைத்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது காகர்புரா கிராமம். இங்கு கடந்த ஜூலை 19 அன்று, பூஜா என்ற 26 வயது தலித் இளம்பெண், கருப்பை தொற்று காரணமாக இறந்து போகவே, அவரது உடலை அடக்கம் செய்ய, கணவர் ராகுல் உள்ளிட்ட குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.சிதையில் பூஜாவின் உடலை வைத்து,அவரது 4 வயது மகன் கொள்ளி வைக்கப் போகும் நேரத்தில், அங்கு வந்த தாக்குர் சமூகத்தினர், இந்த சுடுகாடு உயர் சாதியினருக்கானது; இங்கு தலித்பிணத்தை எரிக்க விட மாட்டோம் என்றுகூறித் தடுத்துள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பிராமணர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதைக் குறிப்பிட்டு, தலித் மக்கள் எவ்வளவோ போராடியும் சுமார் 6 மணிநேரம் வரைபிணத்தை எரிக்க விடாமல் அராஜகத் தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் சிதையில் வைக்கப்பட்ட தலித் இளம்பெண் பூஜாவின் உடலைஎரிக்க முடியாமல், அவரது குடும்பத்தினர் பாதியிலேயே அங்கிருந்து எடுத்து,4 கி.மீ. தூரத்திலுள்ள ‘நாக்லா லால் தாஸ்’ என்ற இடத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடித்து தகுந்த தண்டனை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். எனினும் இச்சம்பவம் தொடர்பாக,உத்தரப்பிரதேச பாஜக அரசின் காவல்துறை, சாதி ஆதிக்க வெறியர்கள் மீதுவழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.இதனிடையே காகர்புரா பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கும் அடக்கஸ் தலம் இல்லை; அவர்கள் தங்களின் வீடுகளுக்கு உள்ளேயே பிணங்களை அடக்கம் செய்துகொள்ளும் அவலத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

;