tamilnadu

img

பாஜக இனி அயோத்தியை வைத்து வியாபாரம் செய்ய முடியாது!

புதுதில்லி:
“பாஜகவால், இனி அயோத்தியை வைத்து வியாபாரம் செய்ய முடியாது” என்று பாஜகவின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவரும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.ஒவ்வொரு தேர்தலிலும், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்’ என்று வாக்குறுதி அளிப்பதும், அதனடிப்படையில் இந்துக் களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதும், பாஜகவின் நீண்டகால தேர்தல் உத்தியாக இருந்து வந்தது. கடந்தமக்களவைத் தேர்தலிலும் கூட ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டப்பூர்வத் தடையை உச்சநீதிமன்றம் கடந்த சனிக்கிழமையன்று அளித்த தீர்ப்பில் விலக்கிக் கொண்டுவிட்டது. இந்நிலையில், யஷ்வந்த்சின்கா டுவிட்டர் பக்கத்தில்கருத்து ஒன்றை பதிவிட்டுள் ளார். அதில், “அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததற்காகஇறைவனுக்கு நன்றி. இதனை வைத்து, அரசியலில் இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் செய்தவர்களின் கடைகளை, இந்தத் தீர்ப்பு மூடிவிட்டது” என்று கூறியுள்ளார்.

;