பாட்னா:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
கொரோனா காலத்தில் மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசு மற்றும் முதல்வர் நிதிஷ்குமாரின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் அவருடன் கூட்டணி வைத்துள்ள பாஜக எப்படியாவது வெற்றி பெற இந்த வாக்குறுதியை அளித்துள்ளது. மக்களை கொடும் நோயிலிருந்து காப்பாற்ற அரசுகள்தடுப்பூசிகளை இலவச மாகத்தான் வழங்க வேண்டும். ஆனால் பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி என்று பாஜக அளித் துள்ள தேர்தல் வாக்குறுதி வினோதமாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவது என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.