tamilnadu

img

அசுபமான நேரத்தில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜையா? சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி எதிர்ப்பு

அயோத்தி:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டிக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின்னணியில், அங்கு கோயில் கட்டுவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கு, “ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்தக் ஷேத்ர டிரஸ்ட்” அழைப்பு விடுத்துள்ளது. விழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.இந்நிலையில், பூமி பூஜைக்கு குறிக்கப்பட்டுள்ள “ஆகஸ்ட் 5  மதியம் 12.15 மணியிலிருந்து 32 விநாடிகள் நேரம், நல்ல நேரம் அல்ல” என்று ஜியோதிஷ்பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி பரபரப்பைக் கிளப்பி யுள்ளார். இதுதொடர்பாக மேலும் கூறியிருக்கும் ஜியோதிஷ்பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி, “நான் இந்த ராமர் கோவில் அமைப்புக்குழுவில் எந்த பதவியையும் வகிக்க விரும்பவில்லை; இந்தக் கோவில் சரியானமுறையில் கட்டப்பட வேண்டும் என்பதையும் அடிக்கல் நாட்டும் விழா ஒரு சுப வேளையில் நடக்கவேண்டும் என்பதையும் மட்டுமே விரும்புகிறேன். ஆனால், தற்போது குறித்துள்ள அடிக்கல்நாட்டு விழா நேரம் நல்ல நேரம் இல்லை. அது அசுபமான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.

;