tamilnadu

img

இந்திய அரசியலமைப்பு சட்ட தந்தை அம்பேத்கர் இல்லையாம்.. பி.என். ராவ் என்ற பிராமணர்தான் எழுதிக்கொடுத்தாராம்

காந்தி நகர்:
பிராமணர்களின் டிஎன்ஏ விஷேசமானது; இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியதே கூட ஒரு பிராமணர்தான்; அம்பேத்கர் அல்ல என்று, பாஜக-வைச் சேர்ந்த குஜராத் மாநில சபாநாயகர் ராஜேந் திர திரிவேதி கூறியுள்ளார்.

பிராமணர்கள் நடத்தும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக குஜராத்மாநிலம், காந்தி நகரில், ‘மெகா பிராமின் பிசினஸ் சம்மிட்’ (Mega BrahminBusiness Summit) என்ற தலைப்பில், ‘பிராமணர் வர்த்தக உச்சி மாநாடு’ நடைபெற்றது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த சாதிச் சங்க மாநாட்டில், குஜராத் சபாநாயகர் ராஜேந்திரதிரிவேதியும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.அப்போதுதான், அரசியல் சட் டத்தை இயற்றியவர் அம்பேத்கர் அல்ல என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:“ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய சர்வதேச நீதிமன்றத்தின்முதல் இந்திய நீதிபதி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? 60 நாடுகளின் அரசியலமைப்புகளைப் படித்து, அரசியலமைப்பின் முதல் வரைவை பாபா சாஹேப் அம்பேத்கருக்கு எழுதிவழங்கியவர்தான் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாபா சாஹேப் அம்பேத்கருக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அரசியலமைப்பின் முதல் வரைவை உருவாக்கியவர் அம்பேத்கர் அல்ல; பெனகல் நரசிங்க ராவ் எனப்படும் பி.என். ராவ் என்பவர்தான் அவர். அவர் ஒரு பிராமணர்.

இந்த விஷயத்தை அம்பேத்கரேகூறியிருக்கிறார். 1949ம் ஆண்டுநவம்பர் 25-இல் நடந்த அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பேசும்போது, ‘இந்தப் பெருமை எல்லாம் பி.என். ராவையே சாரும்’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர்கள் எப்போதுமே மற்றவர்களை முன்னுக்கு நிறுத்தி, பின் னால் இருந்து செயல்படுபவர்கள் என்பது வரலாறு. அப்படித்தான் அன்றைக்கு பி.என். ராவ், அம்பேத் கரை முன்னிறுத்தினார்.அதுமட்டுமல்ல, “இந்தியாவிலிருந்து இதுவரை நோபல் பரிசுகளைப்
பெற்ற 9 பேர்களில் 8 பிராமணர்கள். அண்மையில் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியும் கூட பிராமணர்தான். தில்லியில் நடைபெற்ற தீ விபத்தில் 11 பேரைக் காப்பாற்றிய ராஜேஷ் சுக்லா கூட ஒரு பிராமணர்தான். பிராமணர்கள் வித்தியாசமான டி.என்.ஏக்களை கொண்டவர்கள். உலக மக்கள் அனைவரையும், ஆசிர்வதிக்கும் பிறப்புரிமையை பெற்றவர்கள். தேச நலனுக்காக பிராமணர்கள் பேசுவதாலேயே அவர்கள்பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக் களில் சேர்கின்றனர்.” இவ்வாறு ராஜேந்திர திரிவேதி பேசியுள்ளார்.

;