tamilnadu

img

பாதுகாப்புத்துறையை ஏமாற்றி வரும் அம்பானி நிறுவனம்... இப்போதுதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

புதுதில்லி:
அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல்’ நிறுவனம், குறித்த நேரத்தில் கப்பல்களை கட்டித் தராததால், அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்று ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியரிங் லிமிடெட்’ RelianceNaval and Engineering Limited (R-Naval) எனப்படும் கப்பல் கட்டும் நிறுவனமாகும். சுருக்கமாக ‘ஆர்- நேவல்’ என்று அழைக்கப்படுகிறது. 

இந்த நிறுவனத்திற்கு, மத்திய பாதுகாப்புத்துறை, கடந்த 2011-ஆம் ஆண்டுரூ. 2500 கோடி மதிப்பிலான, 5 ரோந்துக்கப்பல்களை (Naval offshore patrol vessels - NPOVs) கட்டித் தருவதற்கான ஆர்டர்களை வழங்கியிருந்தது.ஒப்பந்தப்படி, ‘ஆர்- நேவல்’ 2000 டன் எடைகொண்ட ரோந்துக் கப்பல்கள் ஐந்தை, 2014-15 ஆம் ஆண்டுக்குள் தயாரித்து அளித்திருக்க வேண்டும். ஆனால்,இதுவரை ஒரு கப்பலைக் கூட அளிக்கவில்லை. இதுகுறித்தே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமானது, ஆர்- நேவல் நிறுவனத்திற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கப்பல்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், உரிய அபராதம் செலுத்துவோம் என்று ஆர்- நேவல் நிறுவனம் ஒப்பந்தத்தில் கூறியிருந்தது. அதன்படி ரூ. 980 கோடி அபராதத் தொகையை, வங்கி உத்தரவாதத்திலிருந்து மத்திய பாதுகாப்புத்துறை தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறது.அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட்’நிறுவனம், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து நஷ்டக் கணக்கு காட்டி வருகிறது.வங்கியில் வாங்கிய கடனையும் கட்டவில்லை. குறிப்பாக ஐடிபிஐ வங்கி அதிக அளவில் கடன் கொடுத்திருந்த நிலையில், இந்த கடனைச் செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் என்று தேசியநிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் ‘ஆர்நேவல்’ நிறுவனம் மனு அளித்துள்ளது. அத்துடன் திவால் நோட்டீஸ் அளிக்கவும் திட்டமிட்டு வருகிறது.இதற்கிடையேதான் மத்திய பாதுகாப்புத்துறை ஆர்- நேவலுக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

;