அசாமில் இருந்து 13 பேருடன் பயணித்த இந்திய விமானப்படை விமானம் மாயமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலத்தின் ஜோர்கத் பகுதியில் இருந்து அருணாச்சல் பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதிக்கு ஏ.என் 32 வகை இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் மதியம் 12.25மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் இந்த விமானம் பிற்பகல் 1மணியளவில் ராடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து சுகோய்-30 சி 130 வகை விமானங்கள் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.