tamilnadu

img

டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 8.36 ரூபாய் குறைப்பு - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் டீசல் விலை இப்போது லிட்டருக்கு 82 ரூபாயிலிருந்து 73.64 ரூபாயாகக் குறையும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை டெல்லியின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும் என்றும் கூறினார். வாட் குறைப்பு காரணமாக டெல்லியில் டீசல் விலை ரூ .8.36 குறைக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

“டெல்லியின் பொருளாதாரத்தை உயர்த்த கடுமையான சவால் உள்ளது. டீசல் விலை இப்போது லிட்டருக்கு 82 ரூபாயிலிருந்து 73.64 ரூபாயாகக் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். 

தேசிய தலைநகரில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக இருந்து முதல் முறையாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் தொடர்ச்சியாக 18 நாட்களுக்கு விலைகள் உயர்த்தப்பட்டன. டீசல் விலை லிட்டருக்கு ரூ 10.48 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8.50 ஆகவும் அதிகரித்தது. 

எனவே டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை 16.75 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், பெட்ரோல் மீதான வரியை 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும் மே மாத தொடக்கத்தில் டெல்லி அரசு அதிகரித்தது. அதன் காரணமாக டெல்லியில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு ரூ 7.10 மற்றும் ரூ 1.67 ஆக அதிகரித்தது.

தற்போது, பெட்ரோல் மீதான மத்திய கலால் லிட்டருக்கு ரூ 32.98 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 31.83 ஆகவும் உள்ளது. டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் லிட்டருக்கு ரூ 17.71 ஆகவும் டீசலில் ரூ 17.60 ஆகவும் உள்ளது. 

டெல்லி அரசு தனது மக்கள் கொரோனா காலத்தில் படும் பாடுகளை அறிந்து ,அதற்கு  ஓரளவாவது உதவும் நோக்கில் டீசல் விலையை குறைத்துள்ளது.இதை பார்த்தாவது மத்திய மற்றும் தமிழக அதிமுக அரசுகளும் , டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்கிறதா பார்ப்போம்.

;