tamilnadu

img

பண மதிப்பிழப்பால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு - ஆய்வில் தகவல்


பாஜகவினரால் மோடியின் சாதனை திட்டம் என்று கூறப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.



அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2000 மற்றும் 2010-ம் ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு வேலைவாய்ப்பின்மை அதிகபட்சமாக 6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பின்னர் வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.குறிப்பாக 2016-ம் ஆண்டுக்குப் பின்னர் வேலை வாய்ப்பின்மை கடுமையாக உயர்ந்து வருகிறது. ’வொர்க்கிங் இந்தியா 2019’ என்ற ஆய்வின் அடிப்படையில் குறிப்பாக 20 முதல் 24 வரையிலான இளைஞர்கள் அதிகளவில் வேலையில்லாமல் உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.


ஆண்கள் நிலையைவிட பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்திய தொழிலாளர் சந்தை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


;