tamilnadu

img

3.5 லட்சம் தொழிலாளர்களிடம் ரூ. 69 கோடி வசூலித்த ரயில்வே....

புதுதில்லி:
சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத புலம்பெயர் தொழிலாளர் களுக்காக, கடந்த 12-ந் தேதி முதல்ராஜதானி வழித்தடங்களில் சிறப்புரயில்கள் இயக்கப்பட்டு வருகின் றன.தில்லிக்கும், முக்கிய நகரங்களுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில்களில் ராஜதானி ரயிலுக்குஉரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்த வகையில், மே 12 முதல்16 வரை 5 நாட்களில், ராஜதானி ரயில்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 634 பேர், அவரவர் சொந்த ஊர் களுக்குச் சென்றுள்ளதாகவும், இதன்மூலம் ரயில்வேக்கு 69 கோடியே33 லட்சத்து 67 ஆயிரத்து 735 ரூபாய்வருவாய் கிடைத்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள் ளது.அதாவது, பிழைக்க வந்த இடத் தில், யாருமற்ற அநாதையாக இறந்துபோய் விடக்கூடாது; எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என்று போராடிய நபர்களிடமிருந்து ரூ. 69 கோடியை ரயில்வே வசூலித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தில் 85 சதவிகிதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று மோடி அரசு முன்பு கூறியிருந்தது. அது பொய்யான அறிவிப்பு என்பதும், தற்போதைய ரயில்வே அறிக்கை மூலம் அம்பலமாகி இருக்கிறது.ரயில் கட்டணம் செலுத்துவதற்குக் கூட பணமில்லாதவர்கள், கால்நடையாகவே ஊருக்குப் புறப்பட்டு, ஆங்காங்கே சாலை விபத்துக்களில் உயிரை பறிகொடுப்பது தனித் துயரமாகும்.

;