tamilnadu

img

இன்று பொது வேலைநிறுத்தம்

25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கிறார்கள்

புதுதில்லி, ஜன. 7- இந்திய தொழிலாளி வர்க்கம் பிரம்மாண்ட எழுச்சியோடு இன்று (ஜனவரி 8) களமிறங்குகிறது. சுமார்  25 கோடி தொழிலாளர்கள் இன்றைய நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று ‘எகானமிக்ஸ் டைம்ஸ்’ உள்ளிட்ட ஏடுகள் கணித்துள் ளன. ‘பாரத் பந்த்’ என்று இந்த ஏடுகள் அறிவித்துவிட்டன.  பிஎம்எஸ் தவிர 10 மத்திய தொழிற் சங்கங்கள், அனைத்து துறைவாரி சம்மே ளனங்கள், அனைத்து பொதுத்துறை நிறு வன ஊழியர் சங்கங்கள் உள்பட 60 அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அழைப்பினை ஏற்று நடைபெறுகிற இந்த மாபெரும் தேசபக்தப் போராட் டத்தில்  அனைத்து விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர் சங்கங்கள், மாண வர், வாலிபர், மாதர், தலித், பழங்குடி மக்கள் இயக்கங்கள் உள்பட அனைத்து அமைப்புகளும் கரம்கோர்த்து வீதியில் இறங்குகின்றன. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) லிபரே சன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் மறியல் களம் காண்கின்றன. தமிழகத்தில் இவ்வியக்கங்களுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கிற, வேலையின்மையை மேலும்  மேலும் தீவிரப்படுத்துகிற, குறைந்த பட்சக் கூலியை வெட்டிக் குறைக்கிற, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாது காப்பு அம்சங்களை சீர்குலைக்கிற, பொதுத்துறை நிறுவனங்களை சூறை யாடுகிற மோடி அரசின் கொடிய நட வடிக்கைகளுக்கு எதிராக 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து பிரதான தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பிஎஸ் என்எல், ரயில்வே, சுரங்கங்கள், துறை முகங்கள் என அனைத்துத் துறைகளி லும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அரசுப் போக்குவரத்து, ஆட்டோ, சாலை போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

;