tamilnadu

img

சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 1400 சதவிகிதம் அதிகரிப்பு

புதுதில்லி, ஏப். 4 - பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் 1400 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதித்துறையே ஒப்புக் கொண்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். கறுப்புப் பணம், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் ஆகியவற்றைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.ஆனால், பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனை 1400 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, கடந்த 2017-18 நிதியாண்டில் மட்டும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் சுமார் 14 லட்சம் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது. இது கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தேகப் பரிமாற்றங்களை விட மூன்று மடங்கு அதிகமாகும்; அத்துடன் பணமதிப்பு நீக்க நேரத்தில் நடந்ததைப் போல 1400 மடங்கு அதிகமாகும் என்றும் கூறியுள்ளது.சந்தேகத்திற்கு உரிய பணப்பரிவர்த்தனைகளை நிதித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்தாலும், அவற்றின் மீது இந்த அமைப்பால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, ஐபி, டிஇஐ உள்ளிட்ட அமைப்புக்களால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

;