tamilnadu

img

விவேகானந்தருக்கு பெங்களூருவில் 120 அடியில் சிலை

பெங்களுரூ:
எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசு,இந்து சமயத்துறவி விவேகானந்தருக்கு 120 அடி உயரத்தில் சிலை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

பெங்களுரூவில் இருந்து 10 நிமிட பயணத் தூரத்தில் பன்னரகட்டா தேசிய பூங்காஅருகே முத்யலா மதுவு நீர்வீழ்ச்சிக்கு அருகே 3 ஏக்கர் நிலத்தில் சிலை அமையும்; மேலும் வீட்டுவசதி வாரியத்தால் 1900 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் பிரதமர் டவுன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்தச் சிலை இருக்கும் என்று கர் நாடக வீட்டுவசதித் துறை அமைச்சர் வி.சோமன்னா தெரிவித்துள்ளார். 

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.3 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பை கர்நாடகம் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில்,இப்போது சிலை அமைப்பதுதான் முக்கியப் பிரச்சனையா? என்று டி.கே. சிவகுமார் உள்ளிட்ட எதிர்க்கட் சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கொரோனாவால் பாதிக் கப்பட்ட விவசாயிகள், தொழி லாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்காத எடியூரப்பா அரசுக்கு, சிலைக்கு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிடமுடிகிறதா? என்றும் கேட்டுள்ளனர்.பன்னர கட்டா தேசியப் பூங்காவிற்கு அருகில் விவேகானந்தர் சிலையை அமைக்கக் கூடாது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

;