tamilnadu

img

மருத்துவக் காப்பீடு பட்டியலில் டெலிமெடிசினை சேர்க்க பரிந்துரை

புதுதில்லி:
 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவிந்து வரு கின்றனர். நோயாளிகள் அனைவரையும் சந்திக்க முடியாத மருத்துவர்கள் அவர்களுக்கு தொலை மருத்துவம் (டெலிமெடிசின்) முறையில் ஆலோசனை வழங்குகின்றனர்.தொலை மருத்துவம்  இந்திய மருத்துவத் துறையில் முறைப்படுத்தப்படாமல் இருந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குபிறகு இதை முறைப்படுத்திய மத்திய சுகாதாரத் துறை கடந்த மார்ச் 25 அன்றுஅதற்கான வழிமுறைகளைவெளியிட்டது. இதையடுத்து, மருத்துவக்காப்பீடு அளிக்கும் நோய் சிகிச்சை பட்டியலில் தொலை மருத்துவத்தை சேர்க்க இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.இதுகுறித்து ஐஆர்டிஏஐ வட்டாரத்தினர் கூறுகையில், தொலை மருத்துவம் அறிமுகமானது முதல் அதை காப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இது மத்திய அரசால் முறைப்படுத்தப் படாமல் இருந்ததால் ஏற்கப்படவில்லை. கொரோனா சூழலில் இதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று  தெரிவித்தனர். ஐஆர்டிஏஐ அளிக்கும் பரிந்துரைகளை மருத்துவக் காப்பீடுநிறுவனங்கள் ஏற்றுக்கொள்வது வழக்கமாக உள்ளது. சிலசமயம் அவற்றில் மாற்றங்கள் செய்துகொள்வதும் உண்டு.தொலைமருத்துவம் பற்றிய  கருத்தரங்கம் இணையதளம் மூலமாக சமீபத்தில் தில்லி தொழில் வர்த்தக சபை நடத்தியது. இதில் எழுந்த கருத்துகள் நிதி ஆயோக் பரிந்துரைக்காக அனுப்பப் பட்டுள்ளன.