tamilnadu

img

மோடி அரசின் 10 தோல்விகள்

வரிசைப்படுத்திய அபிஷேக் சிங்வி

புதுதில்லி, ஆக.19- நாட்டின் பொருளாதார விவகா ரங்களில் மோடி அரசின் 10 தோல்வி களை, காங்கிரஸ் மூத்தத் தலைவ ரும், மத்திய முன்னாள் அமைச்சரு மான அபிஷேக் மனு சிங்வி வரி சைப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் அவர் மேலும் கூறியிருப்பதா வது: “இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான, குழப்பமான நிலையில் இருக்கிறது. ஆனால்,  இதைச் சீர்செய்ய மத்திய அரசு போது மான நடவடிக்கைகளை எடுக்க வில்லை. கொள்கை வழியிலான தீர்வுகளும் காணப்படவில்லை. பொருளாதார விவகாரத்தில் மத் திய அரசு 10 தோல்விகளைக் கண்டுள் ளது. ஆட்டோமொபைல் விற்பனை யில் ஓராண்டில் 31 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கார்கள் விற்பனை 23 சதவிகிதமும் இருசக்கர வாகன விற்பனை 12 சதவிகிதமும் டிராக்டர் விற்பனை 14 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன. பங்குச் சந்தையி லும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை 5 சதவிகிதமும் தேசி யப் பங்குச் சந்தை 10 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில் வெளியான மத்திய பட்ஜெட்டில், நிதிப் பற்றாக் குறை 3.46 சதவிகிதம் என அறிவிக்கப் பட்டது. ஆனால், அது தவறான புள்ளி விவரங்கள் என்பதை தணிக்கைக் குழு மறுமதிப்பீடு செய்து அம்பலப் படுத்தியுள்ளது. உண்மையில் நாட் டின் நிதிப் பற்றாக்குறை 5.8 சதவிகி தம் எனத் தணிக்கைக் குழு கூறி யுள்ளது.  நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ‘உற்பத்தியை இரட்டை இலக்கத்துக் குக் கொண்டு வருவோம்’ என்று மத் திய அரசு கூறியது. ஆனால், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை யிலான காலகட்டத்தில் 5.8 சதவிகி தம்தான் இருந்துள்ளது. இது, மோடி யின் அரசிலேயே மிக மோசமான நிலையாகும். அதேபோல, தொழிலாளர் சக்தி யும் குறைந்துவருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலை காணப்படுகிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வழங்குவதைக் குறைத்து விட்டன. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து  வருகிறது

அடுத்தபடியாக, அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருகிறது. கடந்த  ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை யிலான காலகட்டத்தில், அந்நிய நேரடி முதலீடு 7 சதவிகிதம் குறைந் துள்ளது. வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் கடன் மற்றும் பங்குச் சந்தை களில் முதலீட்டைத் திரும்ப எடுத்துக் கொண்டு வெளியேறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. நடப்புமாதத்தில் மட்டும் 9 ஆயிரம் கோடி ரூபாய் முத லீட்டை அவர்கள் திரும்பப் பெற்றுள் ளனர். இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.