tamilnadu

இன்று ஜிப்மர் மருத்துவர்கள்  வேலைநிறுத்தப் போராட்டம்

 புதுச்சேரி,ஜூன் 16  வருகிற ஜூன் 17ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அறுவைச் சிகிச்சை செய்யமாட்டோம் என்று ஜிப்மர் மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலை யில், ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். வெளிநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பரிசோதனைக் கூடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 17) முதல் மருத்துவர்கள் பணியில் இருக்கமாட்டார்கள். இதேபோல, திங்கள்கிழமை முதல் அறுவை சிகிச்சைப் பணியிலும் ஈடுபட மாட்டோம். அதேநேரம், அவசர கால சிகிச்சைகளில் மட்டும் ஈடுபடுவோம் என ஜிப்மர் மருத்து வர்கள் சங்கம் அறிவித்துள்ளது.