புதுச்சேரி, ஜூலை 14- புதுச்சேரியில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1531ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 684ஆகவும் உயர்ந்துள்ளது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 889. 18 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் புதுச்சேரி 51, காரைக்கால் 2, ஏனாம் 10ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்தார்.