புதுச்சேரி, ஜூலை 30- ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதுச்சேரி பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் பேச்சு மற்றும் ஓவியப் போட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மொத்தம் 148 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் நிர்வாகி எ.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி குற்ற விசாரணைத் துறையின் காவல் துறை கண்காணிப்பாளர் செல்வம், எழுத்தாளர் மு.கு.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். கவிஞர் சந்திரகுமார், நிர்வாகி ப. பாலமுருகன் உட்பட திரளழனோர் கலந்துகொண்டனர். முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ. 7,500, ரூ. 5,000த்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.