புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தனது பிரச்சாரத்தை கூட்டணி கட்சி தலைவர்களுடன் துவக்கினார். முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், திமுக வடக்கு பகுதி அமைப்பாளர் சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம்,வைத்தியலிங்கம் எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.