tamilnadu

img

இந்தியாவில் 80 லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று புதியதாக 48 ஆயிரத்து 268 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று 551 புதிய இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 641 ஆகா உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களில் 11 ஆயிரத்து 737 தொற்றுகள் குணமடைந்துள்ளனர். மொத்த சிகிச்சை பெறுபவர்கள் 5 லட்சத்து 82 ஆயிரத்து 649 ஆகா உள்ளது. இதுவரை 74 லட்சத்து 32 ஆயிரத்து 829 தொற்றுகள் குணமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 59 ஆயிரத்து 454 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் அதிக தொற்றுகள் பாதித்த இடமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 971 தொற்றுகள் சிகிச்சையில் உள்ளது. 43 ஆயிரத்து 837 பேர் இறந்துள்ளது. அதனை தொடர்ந்து, கேரளாவில் 90, 671 தொற்றுகள் சிகிச்சையில் உள்ளது. 1,457 இறப்புகள் பதிவாகியுள்ளது. அக்டோபர் 30 வரை 10,87,96,064 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில், 10,67,976 மாதிரிகள் வெள்ளியன்று சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.