tamilnadu

புதுச்சேரி காமராஜ் நகரில் காங்., வேட்பாளர் வெற்றி

புதுச்சேரி,அக்.24- புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார், 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராஜ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியாகி விட்டார்.  இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது. காங்கிரஸ் சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிட்டனர்.அக்டோபர் 21 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வியாழனன்று எண்ணப்பட்டன. இதில் காங்கிரசின் ஜான்குமார், 14 ஆயிரத்து 782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 3 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கை ஒரு மணிநேரத்தில் நிறைவு பெற்றது. ஜான் குமார் வெற்றி பெற்றதால், நியமனம் உள்பட 33 எம். எல்.ஏ.க்களைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 15 ஆக அதிகரித்துள்ளது.