திருவனந்தபுரம், டிச.22- மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நமது நாட்டின் தற்போதைய நிலைமை நம்பிக்கையளிக்கவில்லை என எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெடு மங்காடு நகரில் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவின் பாரம்பரியம் மாறுபட்ட கலாச்சாரங்களால் செழுமை பெற்றதாகும். வெவ்வேறு மதங்களால் அது பிணைக்கப்பட்டுள்ளது. அவை சாதி, மதங்களின் பெயரால் சிதறுகிறது என்கிற கவலை அதிகரிக்கிறது. கலாச்சாரங்கள் பிளவுபடுத்துவதற்கானவை அல்ல. பிளவுபடுத்தும் கலாச்சாரத்தால் ஒரு தேசத்தை அமைதியாக உருவாக்க முடியாது. மதங்கள் அதன் ஆயுதங்கள் அல்ல. மக்களை இனங்களாகப் பிரிப்பது நமது பழம்பெருமை மிக்க மரபு களுடனான மோதுவதாகும். புத்தகங்கள் மற்றொன்றைப் பற்றிய ஆழமான புரிதலைத் தூண்டுகின்றன.