புதுதில்லி:
உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவை தொகுதியிலும், ராஜஸ்தானில் 12 தொகுதிகளிலும், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7 தொகுதிகளிலும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோன்று, பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 மற்றும் ஜம்மு, காஷ்மீரில் 2 தொகுதிகளிலும் மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் சனிக்கிழமையுடன் ஓய்ந்தது.