tamilnadu

img

வேலை கேட்டு வாலிபர்கள் பேரணி- ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,பிப்.18- அரசுத் துறைகளில் உள்ள காலிபணியிடங்களை  நிரப்பக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் புதுச்சேரியில் செவ்வாயன்று (பிப்.18) பேரணி - ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய பாஜக அரசு அறிவித்தபடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்க வேண்டும்,  புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்தபடி வீட்டிற்கு ஒரு வருக்கு வேலை வழங்க வேண்டும், அரசுத் துறை களில் உள்ள காலிப் பணி யிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்ப வேண்டும், வேலை கிடைக்கும் வரை இளை ஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டன. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஆனந்து தலைமை தாங்கினார்.  செயலாளர் பி.சரவணன் பேரணியை துவக்கி வைத்தார். மாண வர் சங்க பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் பாஸ்கர், சஞ்செய் செல்வ ராஜ், சத்தியராஜ், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று தலைமை தபால்நிலையம் எதிரில் நிறைவடைந்தது.