tamilnadu

img

ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தடை – தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

சென்னை, டிச. 10 - புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை  தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச் ்சேரி எல்லையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோவில் நகரத்தில் பல்லா யிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் கிரவுன் ரோடு எனப்படும் திட்டத்திற்கு சாலை அமைப்பதற்காக அங்கு ள்ள மரங்களை வெட்டும் பணியை சர்வதேச நகர  வளர்ச்சிக்குழு மேற்கொண் டது. ஆரோவில் நகரத்தின் மைய பகுதியில் உள்ள மரங்களை நகர வளர்ச்சிக்குழு பொக்லைன் எந்திரங்களை கொண்டு வெட்டியதை அறிந்த  அப்பகுதி குடியிருப்பு வாசிகள்,  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்  ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஆரோ வில் வனப்பகுதியில் அதிகள வில் மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தேசிய  பசுமை தீர்ப்பாயம் தனது  உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

;