tamilnadu

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

புதுக்கோட்டை, அக்.3- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவருக்கு 10  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அருகே அழியாநிலையில் உள்ள இலங்கை  அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் எம்.சுரேஷ்குமார்(25). இவர்,  கடந்த 2016-ல் ஒரு சிறுமியை திருமயம் அருகே கடத்திச்  சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தி உள்ளார். இது குறித்து திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சுரேஷ்குமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், குற்றம் சாட்ட ப்பட்ட சுரேஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.