tamilnadu

img

நீட் தேர்வு பிரச்சனையால் மாணவி தற்கொலை... ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக...

புதுக்கோட்டை:
நீட் தேர்வு பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலையும் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே டி-களபம் கிராமத்தை சேர்ந்த கணேசன்-வளர்மதி தம்பதியரின் மகள் ஹரிஷ்மா (17). பிளஸ் 2 மாணவியான இவர் தான் படித்து வந்த பள்ளி மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இவருடன் விண்ணப்பித்த சக மாணவிகளுக்கு ஹால் டிக்கட் கிடைத்த நிலையில்ஹரிஷ்மாவுக்கு மட்டும் கிடைக்கவில்லை. ஆன்லைனில் ஹால்டிக்கட் எடுப்பதற்கான ஐடி, பாஸ்வேர்ட்டை மாணவி மறந்து விட்டதால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பள்ளி நிர்வாகமும் ஹால் டிக்கட்பெற்றுத் தரவில்லை.இதனால், மனமுடைந்த மாணவிஹரிஷ்மா விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியமாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் எல்.வடிவேல் உள்ளிட்டோர்வியாழக்கிழமையன்று மாணவியின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினர்.

முறையான சிகிச்சை இல்லை: பெற்றோர் புகார்
‘தனது டாக்டர் கனவு பலிக்காமல்போகுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே எங்கள் மகள் விஷத்தை குடித்துள்ளார். நாங்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த் தோம். வயலுக்கு அடித்து மீதமுள்ள சிறிய அளவிலான மருந்தையே குடித் துள்ளார். மருத்துவர்கள் முறையான சிகிச்சையை, விரைந்து அளித்து இருந்தால் எங்கள் மகளை காப்பாற்றி இருக்கலாம். கொரோனாவை காரணம்காட்டி எங்கள் பிள்ளைக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே எங்கள் பிள்ளையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என கண்ணீர்மல்க பெற்றோர் குற்றம் சாட்டினர். எங்கள் பிள்ளையின் பிறந்தநாளைக்(செப்.3) கொண்டாட வேண்டிய நேரத்தில் எங்களை தவிக்கவிட்டு சென்று விட்டாயே எனக் கதறினர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்,  அரசு வேலை
அதன் பின்னர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும் போது, மாணவி ஹரிஷ்மாவின் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு இடையே தங்கள் மகளை படிக்க வைத்துள்ளனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த பிள்ளையின் விருப்பப்படியே தனியார் பள்ளியில் அதிக செலவு செய்து படிக்க வைத்துள்ளனர். ஆனால்,நீட் என்னும் அரக்கன் அவர்களின்கனவில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. ஏழை, எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை காவு வாங் கும் நீட் தேர்வு முறை மிகப்பெரிய சமூகஅவலம். நீட் தேர்வுமுறை தமிழகத்திற்கு தேவையில்லை என்ற கல்வியாளர்களின் கருத்து எவ்வளவு பெரியஉண்மை என்ற இப்படியான மரணங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

நீட் தேர்வே கொடுமை என்பது ஒரு புறம் இருக்க, அந்த தேர்வை நடத்தும் முறை அதைவிடக் கொடுமையானது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ளசிரமம் முதல், தொலைதூர தேர்வுமையங்கள், பள்ளியின் மூலமாகவே ஹால் டிக்கட் கிடைக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஏழை, எளிய, கிராமப்புறத்து மாணவர்களுக்கு ஒருவிதமான கலக்கத்தையே இந்தத் தேர்வுமுறை உருவாக்குகிறது. எனவே, இத்த
கைய நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.தங்கள் பிள்ளையை இழந்து தவிக்கும் மாணவி ஹரிஷ்மாவின் குடும்பத் திற்கு தமிழக அரசு நிவாரண நிதியாகரூ.10 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

;