tamilnadu

img

கறம்பக்குடி அக்னி ஆற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூன் 8- கறம்பக்குடியை அடுத்த அக்னி ஆற்றில் மாட்டுவண்டிக்கான மணல்குவாரி அமைத்துத் தரக் கோரி புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட சிஐடியு செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன் ஆகியோர் தலைமையில் மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கத் தலைவர் மு.குமார், செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது: கறம்பக்குடி ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட மணல் அள்ளும் மாட்டுவண்டித் தொழி லாளர்கள் உள்ளோம். கறம்பக்குடி ஒன்றி யத்தில் ஓடும் அக்னியாற்றில் மாட்டுவண்டி மூலமாக மணல் அள்ளி குறைந்த விலைக்கு கட்டுமானப் பணிகளுக்காக விற்றுவந்தோம். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இதை நம்பித் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதா ரம் உள்ளது.  இந்நிலையில், கடந்த மூன்று வருடங்க ளாக ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் மாட்டு  வண்டிகளை கைதுசெய்வது, வழக்குப் போடுவது போன்ற இடையூறுகளை வருவாய்த் துறையினர் மற்றம் காவல்துறையினர் தொடர்ந்து செய்துவருகின்றனர்.  எனவே, கறம்பக்குடி அக்னியாற்றுப் பகுதியில் மணல் அள்ளுவதற்கு அரசு சார்பில் குவாரி அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;