tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் படைப்பாளிகள், விஞ்ஞானிகள் பங்கேற்பு

புதுக்கோட்டை, பிப்.8-  புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பிரபல இல க்கிய ஆளுமைகள், விஞ்ஞா னிகள், சமூக செயல்பாட்டா ளர்கள் பங்கேற்று சிறப்பு ரையாற்ற உள்ளனர். இது குறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 4-வது புதுக்கோட்டை புத்தகத் திரு விழா பிப்ரவரி 14 முதல் 23  வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடை பெறுகிறது. முதல் நாளில் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றுகிறார். கீழடி அரங்கை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, குழ ந்தைகளுக்கான கோள ரங்கத்தை பெ.வே.அருண்ச க்திகுமார் திறந்து வைத்து  வாழ்த்துரை வழங்குகின்ற னர்.  தொடர்ந்து நடைபெறும் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானிகள், கலை ஞர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
60 அரங்குகள்
புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்களில் இருந்து  60-க்கும் மேற்பட்ட அரங்கு களில் லட்சக்கணக்கான புத்த கங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. தமிழ னின் தொன்மையான நாகரி கத்தை பறைசாற்றும் கீழடி குறித்த கண்காட்சி அரங்க மும், குழந்தைகளுக்கான கோளரங்கமும் இடம்பெறு கின்றன. புத்தகத் திருவிழா விற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிக ழ்ச்சிகளும், விஞ்ஞானி களுடன் உரையாடல் நிகழ்வு களும், மாலையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.
விருதுகள், பரிசுகள்
விழாவில் சிறந்த கவிதை,  சிறுகதை, கட்டுரை, நாவல்க ளுக்கான விருதுகளும், கவிதை, சிறுகதை போட்டி கள் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
அழைப்பிதழ் வெளியீடு
புத்தகத் திருவிழா விற்கான அழைப்பிதழ் வெளியீடு கவிஞர் நா.முத்து நிலவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அபேகா பண்பாட்டு  நிறுவனர் மருத்துவர் நா.ஜெயராமல், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் எல்.பிரபாகரன் வெளியிட,  பேராசிரியர் ந.விஸ்வநாதன், மு.கீதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

;