புதுக்கோட்டை, ஜூன் 13- கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பல லட்சக்க ணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், விவசாயி களின் எதிகாலமே கேள்விக்குறியாகிவிட்டது. கிராம, நகரம் என அனைத்துப் பகுதி மக்களும் ஒதுங்குவதற்குக்கூட நிழல் இல்லாது தவித்து வருகின்றன. கால்நடைகளுக்கு உணவு கிடைக்காமல் மடிந்து வருகின்றன. 5 ஆண்டுகள், பத்தாண்டுகள், 20 ஆண்டுகள் என திட்டம் போட்டு பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமணச் செலவுகளுக்கு ஆகும் பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்கள் எல்லாம் ஒரு புயலில் விறகுக்குக்கூட வாங்க ஆள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால், புதிதாக மரம் வளர்ப்ப தற்கு ஆர்வம் காட்டாத நிலையிலேயே மக்களும், விவசாயி களும் உள்ளனர். தற்பொழுது குடிநீருக்கே மக்கள் திண்டா டும் அவல நிலையில் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் மாவட்டத்தின் வெப்ப நிலை மேலும் அதிகமாகி பூமி வறட்சி யாகும். மழை பெய்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போகும். நிலத்தடி நீர் படுபாதாளத்திற்குச் சென்றுவிடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் புதுக்கோட்டையை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்குவதற்கு மரம் அறக் கட்டளை நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்ற னர். முதல் கட்டமாக ஜூன் 3 அன்று பள்ளிகள் திறந்த நாளில் மரம் நடும் பணியினை அறக்கட்டளை நிர்வாகி கள் தொடங்கினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மரம் நடும் பணியினைத் தொடங்கிய அறக் கட்டளையினர் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் மரம் நடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளா கங்கள் மட்டுமல்லாது பொதுவான இடங்களிலும் இப்பணி களைச் செய்து வருகின்றனர். இதனொரு பகுதியாக ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மரம் நடும் பணி நடைபெற்றது. ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி இப்பணி யினைத் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலு வலர் சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) சிவக்குமாரி, மரம் அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜா, கண்ணன், தனபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து மரம் அறக்கட்டளையின் நிர்வாக அறங் காவலர் எஸ்.ஆர்.ராஜா கூறும் போது, மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிக மான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 215 மரக்கன்று கள் நடப்பட்டன. வீடுகளை ஒட்டி தனி நபர் பராமரிக்க ஏது வாக உள்ள இடங்களில் தினந்தோறும் தண்ணீர் ஊற்ற வேண்டிய நிலையில் உள்ள மரங்களையும், பொதுவான இடங்களில் வறட்சியை தாங்கி வளரும் மரக்கன்றுகளை யும் நடவு செய்து வருகிறோம். ஒவ்வொரு மரக்கன்றுக் கும் கம்பி வலைக்கூண்டு அமைத்து தொடர்ந்து பராமரிப்ப தற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்றார்.