அறந்தாங்கி, ஆக.28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவணத்தான்கோட்டை மேற்கு நடுநிலைப் பள்ளியில் அறந்தாங்கி வட்ட சட்டப்பணிகள் குழு நடத்தும் சட்ட அறிவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் எஸ்.பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி துவக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி எம்.அமிர்தவேலு தலைமை ஏற்று மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த அறிவுரை வழங்கினார். வழக்கறிஞர்கள் லோகநாதன் கே.எம்.எஸ். செந்தில்குமார், அருண்ராஜ், எஸ்.பழனியப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த உரை நிகழ்த்தினர். இளநிலை நிர்வாக உதவியாளர்(பொ) வி.தேவி நன்றி கூறினார்.