tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்விக்கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரக்குழு சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க  நகரத் தலைவர் எஸ்.விக்கி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், துணை தலைவர் பி.அருண், நகர செயலாளர் பாபு, பொருளாளர் டேவிட் உள்ளிட்டோர் பேசினர்.