tamilnadu

img

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 3-  விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்த செய்ய துடிக்கும் விவசாயிகள் வாழ்வை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில்  இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின்  தாலுகா தலைவர்  பி.வீராச்சாமி தலைமை வகித்தார். விதொச மாநில பொருளாளர். எஸ்.சங்கர் .சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பி.அம்பலராஜ். விதொச ஒன்றிய தலைவர். க.சக்திவடிவேல். ஒன்றிய செயலாளர். க.சித்திரவேல். ஒன்றியக்குழு உறுப்பினர்.பெருமாள் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.