புதுக்கோட்டை, ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையிலிருந்து குரும்பூண்டி ஊராட்சிக்கு அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குரும்பூண்டியில் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளைச் செயலாளர் ந.குமரேசன் தலை மை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை அர சியல் விளக்கவுரையாற்றினார். அவரி டம் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயி ரம் வழங்கப்பட்டது. கோரிக்கைகளை விளக்கி ஒன்றியச் செயலாளர் வி. ரெத்தினவேல், வட்டக்குழு உறுப்பி னர்கள் பி.மணி, வி.இளையராஜா, ஜி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசி னர். குரும்பூண்டி ஊராட்சியில் நில வும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கு வதற்கு உள்ளாட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும். கந்தர்வகோட்டையிலிருந்து குரும் பூண்டி ஊராட்சிக்கு அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன.