tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்


புதுக்கோட்டை, ஜன.25- மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளை யாட்டுப் போட்டிகள் ஆடவர் மற்றும் மக ளிருக்கு 30-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி யில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோருக்கான பிரிவில் 50 மீ ஓட்டம் - கால் ஊனமுற்றோருக் கும், 100 மீ ஓட்டம் - கை ஊனமுற்றோருக் கும், 50மீ ஓட்டம் - குள்ளமானோருக் கும், குண்டு எறிதல் - கால் ஊனமுற்றோ ருக்கும், 100 மீ சக்கர நாற்காலி- இரு கால் களும் ஊனமுற்றோருக்கும் நடத்தப் படவுள்ளது. பார்வையற்றோருக்கான பிரிவில் 50 மீ ஓட்டம் - முற்றிலும் பார்வை யற்றோருக்கும், 100 மீ ஓட்டம் - மிக குறைந்த பார்வையற்றோருக்கும், நின்ற நிலையில் தாண்டுதல்- மிக குறைந்த பார்வையற்றோருக்கும், மென்மை யான பந்து- மிக குறைந்த பார்வை யற்றோருக்கும், குண்டு எறிதல் -முற்றி லும் பார்வையற்றோருக்கும் நடத்தப் படவுள்ளது.  மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கான பிரிவில் 50 மீ ஓட்டம்- ஐக்கு தன்மை முற்றிலும் இல்லாதவருக்கும், மென்மையான பந்து எறிதல் -ஐக்கு தன்மை முற்றிலும் இல்லாதவருக்கும், 100 மீ ஓட்டம்- ஐக்கு தன்மை நல்ல நிலை யில் இருப்பவருக்கும், நின்ற நிலை யில் தாண்டுதல் -மூளை நரம்பு பாதிக் கப்பட்டவருக்கும், குண்டு எறிதல் -ஐக்கு தன்மை நல்ல நிலையில் இருப்பவ ருக்கும் நடத்தப்படவுள்ளது. காது கேளா தோருக்கு 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் 400 மீ ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.  போட்டிகளில் கலந்து கொள்ப வர்களுக்கு வயது வரம்பு கிடையாது. மாவட்ட, மாநில அளவிலான போட்டிக ளில் கலந்து கொள்பவர்களை அவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அக்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவரா என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அல்லது சான்றினை அவசியம் கொண்டு வருதல் வேண்டும். அரசு வழங்கிய அடையாள அட்டை அவசியம் கொண்டு வருதல் வேண்டும். குறிப்பிட்ட பிரிவில் விளையாட கலந்து கொள்பவர்கள் ஒருவர் ஒரு விளையாட் டில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான விiளாட்டுப் போட்டி கள் நடத்தப்படும் போது மாற்றுத்திற னாளிகளுக்கு என செயல்படுத்தப்படும் பள்ளிகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.  மேலும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப் படுத்தும் வகையில் இவ்விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். சக்கர நாற்காலி போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சக்கர நாற்காலியுடன் கலந்து கொள்ள வேண்டும். விருப்ப முள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உரிய ஆவணங்களுடன் 30-ம் தேதி அன்று காலை 8.30 மணிக்கு புதுக் கோட்டை மாவட்ட விளையாட்டரங் கத்தில் ஆஜராக வேண்டும்.

 

;