tamilnadu

img

புதுக்கோட்டை: ஓட்டு போடாததால் பெண்ணை தாக்கிய அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டையில் ஓட்டு போடாததால் பெண்ணை தாக்கி தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.   

தமிழகத்தில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சேவகன் தெருவில் வசித்து வருபவர் சித்ரா தேவி. அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த செல்வராஜ் அப்பகுதியில் அதிமுக வட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி வசந்தராணி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் சித்ரா தேவியின் வீட்டிற்குச் சென்ற செல்வராஜ் 'எனது மனைவிக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை' எனக் கூறி மிரட்டியுள்ளார். பின்னர், கடந்த 24 ஆம் தேதி கொல்லைக்குச் சென்ற கொண்டிருந்த சித்ரா தேவியை வழிமறித்து, “ஏன் எங்கள் கொல்லை பாதை வழியாகச் செல்கிறாய்” எனக் கூறி அவரை செருப்பால் அடித்துள்ளார். மேலும் அவரை கீழே தள்ளி கொடூரமாகத் தாக்கி கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடிவருகின்றனர்.   

;