tamilnadu

img

வேறு ஒருவரின் பெயரில் நகைக்கடன் மோசடி; அதிமுக நிர்வாகி மீது புகார்  

விழுப்புரத்தில் வேறு ஒருவரின் பெயரில் நகைக்கடன் மோசடி செய்த அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் மேல் வாலை ஊராட்சியை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் மத்திய கூட்டுறவு வங்கியில் 10 கிராம் நகைக்கடன் பெற்றிருந்தார். அதனைதொடர்ந்து நேற்று தமிழக அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடியில் கலியபெருமாள் தனக்கு தள்ளுபடி கிடைத்துள்ளதா என மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று பார்த்துள்ளார்.  

இதுகுறித்து மத்திய கூட்டுறவு வங்கி செயலாளரிடம் கேட்டறிந்தபோது, கலியபெருமாள் காஞ்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகைக்கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.  ஆனால் கலியபெருமாள் தாம் வேறு எந்த வங்கியிலும் நகைக்கடன் பெறவில்லை என்றும் தனது பெயரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலியாக நகைக்கடன் பெற்றுள்ளதாகவும் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

இவர் அளித்த புகாரில் தனது பெயரில் மத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் மற்றும் வங்கியின் தலைவர் அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ராஜ் ஆகியோர் போலியாக ஆவணம் தயார் செய்து நகைக்கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து கூட்டுறவு வங்கி செயலாளர் மற்றும் தலைவர் அதிமுக ஒன்றிய செயலாளர் தனபால் ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.