tamilnadu

img

மோடியை நம்பி கேள்விகேட்டு மாட்டிக் கொண்டார் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவமானப்பட்ட ராஜ்நாத் சிங்!

புர்னியா, ஏப்.12-பிரதமர் மோடி தேர்தலை மனத்தில் வைத்து, அறிவித்ததிட்டம்தான், 5 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டமாகும். அத்துடன்இத்திட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்திய மோடி, 2019-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான தொகைரூ. 2 ஆயிரம் உடனடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் கூறினார். தற்போது நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டங்களில், ரூ. 2 ஆயிரம் சென்று சேர்ந்து விட்டதாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்நிலையில், பீகார் மாநிலம் புர்னியாவில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில், பாஜக தலைவரும் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.அப்போது, மக்களோடு உரையாடுவதாக நினைத்துக்கொண்டு, “எனது அன்பான விவசாயி சகோதரர்களே, நீங்கள் எல்லாம் மோடி அறிவித்த முதற்கட்ட உதவித்தொகை ரூ. 2 ஆயிரத்தைப் பெற்றிருப்பீர்களே...” என்றுகேட்டுள்ளார். அதற்கு, கூடியிருந்த விவசாயிகள் அனைவரும், “இல்லை.. இல்லை.. எங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை..” என்று உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். இதனை சமாளிக்க முயன்ற ராஜ்நாத் சிங், “அப்படி இருக்காதே, அனைவரும் பெற்றிருப்பீர்களே... எங்கே, கிடைக்காதவர்கள் கையை உயர்ந்துங்கள்” என்று கூற, அனைவருமே கையை உயர்த்தி, ராஜ்நாத்தை அதிர்ச்சிக்குஉள்ளாக்கி இருக்கின்றனர். அப்படியும் விடாத ராஜ்நாத் சிங், “சரி கிடைத்தவர்கள் கையை உயர்த்துங்கள்” என்றுவார்த்தைகளை மாற்றிப் போட்டபோது, மக்கள் மிகத்தெளிவாக ஒருவர் கூட கையை உயர்த்தாமல் இருந்துள்ளனர்.இதனால், முகம் இருண்டுபோன ராஜ்நாத் சிங், தேவையில்லாமல் கேள்விகேட்டு அவமானப்பட்டு விட்டோமே என்று அடுத்த விஷயத்திற்குத் தாவியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போதுவேகமாக பரவி வருகிறது.

;