முன்னுதாரணமான தோழர் ஆர்.ரகோத்தமன்
படத்திறப்பு நிகழ்வில் ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி
சென்னை, மே 11 - கட்சி உறுப்பினர்களுக்கு முன்னு தாரணமாக திகழ்ந்தவர் தோழர் ஆர்.ரகோத்தமன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மயிலாப்பூர் பகுதி, விவேகா னந்தபுரம் கிளை உறுப்பினர் தோழர் ஆர். ரகோத்தமன் (வயது 80) ஏப்.15 அன்று காலமானார். கடலூர் மாவட் டம் வடலூரை சேர்ந்த அவர், 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது சகோதரர் சீனிவாசன் இடை க்குழு செயலாளராக பணியாற்றி யவர். 2015ஆம் ஆண்டு சென்னை க்கு இடம்பெயர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் பணியாற்றி மறைந்தார். தோழர் ஆர்.ரகோத்தமன் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிறன்று (மே 11) மயி லாப்பூரில் நடைபெற்றது. படத்தை திறந்து வைத்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “வடலூரில் சிறிய அள வில் தோழர் ரகோத்தமன் வைத்தி ருந்த கிரைண்டர் ஒர்க்ஷாப்தான் கட்சி அலுவலகமாக இருந்தது. ரகோத்த மன் கட்சி பணியாற்றியதோடு, அவ ரது மனைவி ஆர்.ராதாவை மாதர் சங்க ஊழியராக மாற்றினார். பலரை யும் கட்சிக்குள் கொண்டு வந்தார். அவரது செயல்பட்டால் ஈர்க்கப்பட்ட அவரது மகன்கள், மகள்கள் உள்ளிட்ட குடும்பமே கட்சி ஆதர வாளர்களாக உள்ளனர்” என்றார். “கட்சி மீது ஆழமான நம்பிக் கையும், புரிதலும் கொண்டிருந்த தோழர் ரகோத்தமன் எப்போ தும் கட்சி உணர்வுடனும் உற்சாகத்து டனும் இருப்பார். கட்சிக்கு அதன் உறுப்பினர்கள்தான் சொத்து. உறுப்பினர்களால்தான் கட்சி இயங்குகிறது. மக்களுக்கும் கட்சிக்கும் ரத்தநாளங்களாக இருப்பவர்கள் கட்சி உறுப்பி னர்கள்தான். அத்தகைய கட்சி உறுப்பினர்களுக்கு முன்னுதார ணமாக திகழ்ந்தவர் ரகோத்தமன்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு விவேகானந்த புரம் கிளைச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செய லாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., மற்றும் ரகோத்தமன் குடும்ப த்தினர் பேசினர்.